தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் இருக்கும் தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர் பாலசுப்பிரமணியனை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் போலீசார் பாலசுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.