நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  சைபர் குற்றங்கள் மனித தவறுகளால் எப்படி நடக்கிறது என்பது குறித்து SBI அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

சைபர் பாதுகாப்பின் பின்னணியில் ஒரு  சைபர் நிகழ்வின் காரணமாக அமையும் மனித தவறுகள்  என்பது பயனர்களால் தெரியாமல் செய்யப்படும் செயல் அல்லது செயல்கள் செய்யப்பட வேண்டிய நிலையில், அதனை செய்யாமல் இருப்பதை குறிப்பதாகும். அவ்வகையான நிகழ்வுகளில் சுமார் 95% வரையானவை மனிதத் தவறுகளினால் நடக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித தவறை முற்றிலுமாக நீக்க முடியுமானால் ஒவ்வொரு 20 சைபர்  மோசடிகளில் சுமார் 19 மோசடிகளை தடுக்க முடியும். மனித தவறை குறைத்திட அனைவரும்  பாடுபடுவோம் மற்றும் சைபர் குற்றத்திற்கு எதிராக ஒரு முழுமையான பாதுகாப்பை உருவாக்கிடுவோம் என SBI அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf