நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

மாஸ் ரிமோட் ஆக்சஸ் ஆப் ஊழல் குறித்து SBI கூறுவதாவது, மோசடியாளர் ஒரு வலைதளத்தை உருவாக்கி, அவர் அளிக்கும்  கஸ்டமர் கேர் எண்  ஆனது தேடல் முடிவுகளின் தரவரிசைகளில் முதன்மையாக வருவதை உறுதி செய்கிறார். இதை தொடர்ந்து இந்த மோசடி குறித்து SBI கதை வடிவத்தில் விளக்கியுள்ளது. அதன்படி, 

மோசடியாளர் : இது கச்சிதமாக இருக்கிறது. இது ஒரு போலி எண் என்று யாரும் சந்தேக இயலாது. 

(ரஜித் என்பவர் ஒரு பார்சலை பெறுகிறார். ஆனால் இது அவர் ஆர்டர் செய்த பொருள் கிடையாது. எனவே அவர் ஆன்லைனில் கஸ்டமர் கேர் நம்பரை தேட தொடங்குகிறார். 

ரஜித் : சார் இது நான் ஆர்டர் செய்த பொருள் கிடையாது. இப்போதே பொருளை திரும்ப பெற்று  பணத்தை திரும்ப செலுத்துங்கள் . 

மோசடியாளர் : பார்சல் விஷயத்தில் நீங்கள் எதிர்கொண்ட சிரமத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சார் பார்சலை திரும்பப் பெறவும் பணத்தை திரும்ப பெறுவதற்குமான உங்கள் கோரிக்கையை புக் செய்ய நான் உங்களுக்கு நிச்சயம் உதவுகிறேன். பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணுக்கு நான் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளேன். அதில், உங்கள் இணைப்பை கிளிக் செய்து ஆப்பை பதிவிறக்கம் செய்யவும். 

(தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்றும் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் கேட்டு ராஜா ஆப்-ஐ பதிவிறக்கம் செய்கிறார்.)

ரஜித் :  நான் பதிவிறக்கம் செய்து விடுகிறேன். 

மோசடியாளர் : மிக்க நன்று. சரிபார்ப்பை முடிக்க தயவு செய்து அந்த ஆப்பை திறந்து அந்த ஆப்-ல்  காணப்படும் ஐடி எண்ணை  பகிர கோரி வற்புறுத்துகிறார்.  (அந்த ஆப்-ன்  அம்சங்களை பற்றி அறியாமலேயே ராஜா அந்த டெஸ்ட் ஐடி எண்ணை  தொலைபேசியில் பேசிய நபருடன் பகிர்ந்து கொள்கிறார்.) மோசடியாளர் : ஐடி எண்னை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஐயா நாங்கள் உங்களுக்கு பணத்தை திரும்பி தந்துவிட்டோம். இந்த பணம் உங்களுக்கு வந்துவிட்டது என்பதை உறுதி செய்ய தயவு செய்து உங்கள் வங்கி கணக்கை சரிபார்க்கவும். 

(வங்கி  கணக்கிற்கு பணம் பெறப்பட்டது என்ற ஒரு எஸ்எம்எஸ் தகவல் ரசித் பெறுகிறார். )

ரஜித் : எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது. 

(அந்த செய்தியை பெற்ற பிறகு அந்த பணம் கணக்கில் ஏற்றப்பட்டதா  ? என்பதை சரிபார்க்க ரஜித்  தற்போது தனது வங்கி ஆப்பை திறக்கிறார். ஸ்கிரீன் ஷேரிங் ஆப் இன்னமும் தனது ஃபோனில் இயங்கிக் கொண்டிருப்பதை அறியாது ரஜத் தனது கணக்கில் உள் நுழைகிறார். ரஜித்தின்  போனில் வரிசையாக பணம் எடுக்கப்பட்டதற்கான மெசேஜ்கள் அதற்கு பின்பாக வர தொடங்குகின்றன. இதன் மூலம் மொபைலில் அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை மோசடியாளர்கள் நன்கு கவனித்து பின்பு தங்களது மோசடி கைவரிசையை அவரிடம் காட்டியுள்ளனர். என்பது தெரிய வருகிறது. )

இப்படியே கஸ்டமர் கேர் சர்வீஸ் மூலம் இவர்கள் தொடர்ச்சியாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். எனவே பேசும் நபர் அதிகாரபூர்வ கஸ்டமர் கேர் தானா ? என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்வதோடு, எக்காரணம் கொண்டும், தனிப்பட்ட தகவல்களை பகிரவோ அல்லது அவர்கள் கூறும் செயலியை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என SBI அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf