நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

போலி கஸ்டமர் கேர் மூலம் நடக்கும் மோசடி குறித்து SBI கூறுவதாவது, ஒரு நம்பகமான நிறுவனம் போல் நடித்து கஸ்டமர் கேர் தொடர்பு மையத்திற்காக போலி பக்கங்களை சைபர் குற்றவாளிகள் உருவாக்குகிறார்கள். தொடர்பு மைய தகவலின் பெயரில் மோசடி நபர்களின்  மொபைல் எண் அந்த போலி பக்கத்தில் காண்பிக்கப்படும். எந்த ஒரு நபரும் கூகுளில் அந்த வாடிக்கையாளர் சேவை விவரங்களை தேடும்போது மோசடி நபர்களின் விவரங்கள் முதலில் காண்பிக்கப்படும் வகையில் பணம் கொடுத்து முதன்மையாக அவர்களது வலைத்தளத்தை கொண்டு வருவர்.

பின் பாதிக்கப்பட்ட நபர், அந்த எண்ணை  தொடர்பு கொள்ளும்போது அந்த மோசடி நபர் பாதிக்கப்பட்டவரை நம்ப வைத்து தான் அறிவுறுத்துவதை செய்ய தூண்டுகிறார். அதன்படி,  தனிப்பட்ட விவரங்களை பகிர்வது, வங்கி விவரங்களை பகிர்வது, ஒரு ரிமோட் ஆக்சிஸ் ஆப்-பினை பதிவிறக்கம் செய்வது, தங்கள் மொபைல் ஸ்க்ரீனை மோசடி நபர் அணுக முடியும் என்பதை அறியாமல் பாதிக்கப்பட்ட நபர் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்கிறார்.

அந்த மோசடி நபரோ பாதிக்கப்பட்டவரின் இந்த விவரங்களை தவறாக பயன்படுத்தி மோசடியை அரங்கேற்றி  பணத்தை திருடி விடுகிறார். கஸ்டமர் கேர் அல்லது தொடர்பு விவரங்களுக்கு எப்போதுமே அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு மட்டுமே செல்லுங்கள். அது அதிகாரப்பூர்வமானது தானா என்பதை அறிந்து கொள்ள ஏராளமான கேள்விகளை எழுப்புங்கள் என்னவாயினும் தனிப்பட்ட தகவல்களை பகிரவோ, அல்லது  அவர்கள் கூறும் செயலியை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என SBI அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf