தமிழகத்தில் அறநிலையத்துறை சார்பில் பல கோவில்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில் நிர்வாக செலவினங்களுக்காக ஆறு கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது உயர்த்தப்பட்டு எட்டு கோடி ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒரு கால பூஜை திட்ட திருக்கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் நலனை கருதி மேற்படிப்புக்கு வருடத்திற்கு 400 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மைய நிதி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அர்ச்சவர்களின் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உயர்கல்வி தொகையும் 400 மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அதே சமயம் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை நான்காயிரம் ரூபாய் மற்றும் 2000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.