SBI-ன் சிறப்பு FD திட்டமான ‘அம்ரித் கலாஷ்’ திட்டத்தின் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில்  எஸ்பிஐ-யின் நிலையான வைப்புத் திட்டங்களில் ஒன்று அம்ரித் கலாஷ் வைப்புத் திட்டம். இந்த முதலீட்டு திட்டத்தில், வங்கியானது சாதாரண நிலையான வைப்புத்தொகையை விட அதிக வட்டியை வழங்குகிறது. எஸ்பிஐ பிப்ரவரி 15 அன்று இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பின்னர் இத்திட்டத்தின் காலம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் வரவேற்பை கருத்தில் கொண்டு, வங்கி ஆகஸ்ட் 15 வரை திட்டத்தின் காலத்தை நீட்டித்தது. இத்திட்டம் ஆக.15 (நேற்றுடன்) முடிவடைந்த நிலையில் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டியும், மற்றவர்களுக்கு 7.1% வட்டியும் கிடைக்கும். இதில் 2 கோடி வரை டெபாசிட் செய்யலாம். வட்டி தொகையை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு இடைவெளியில் பெறலாம்.