கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கரூரை அடுத்த மாயனூர் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த மாணவர் நாகராஜன்.

இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில், எனது குரல் பெண் போல் உள்ளதால் நான் பயிலும் பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியரான செந்தில்குமார் என்னிடம் ஆபாசமாக பேசுவதும், தொடக்கூடாத இடத்தில் தொடுவதுமாக உள்ளார்.

இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து யாரிடமும் கூறினால் வீண் பழி சுமத்தி பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவதாகவும், என்னால் அந்த பள்ளிக்கு அவமானம் என்றும் என்னை தொடர்ந்து மிரட்டி துன்புறுத்தி வருகிறார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தற்போது இந்த மனு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.