திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 16-ந் தேதி திரிபுராவிலும்,  பிப் 27-ந் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்துக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் இதற்கான வேட்பாளர் அறிவிப்பு மற்றும் பிரசாரம் போன்ற பணிகள் முடுக்கபட்டுள்ளன. இந்நிலையில் மேகாலயாவில் மொத்தம்  60 தொகுதிகளிலும் பா.ஜனதா கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

அங்கு தற்போது முதல்-மந்திரி கன்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்களின் கட்சியுடன் சேர்ந்த கூட்டணி அரசியல் நடந்து வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அதேநேரம் நாகாலாந்தில் கூட்டணி கட்சியான ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள மொத்தம் 60 தொகுதியில், 20 இடங்களில் மட்டும்  பா.ஜனதா போட்டியிடுவதாக பா.ஜனதா செயலாளரும், வடகிழக்கு மாநிலங்களுக்கான இணை பொறுப்பாளருமான ரிதுராஜ் சின்கா நேற்று அறிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடியின் தலைமையில் மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைந்த போதும், வடகிழக்கு மாநிலங்களில் ஊழல் மற்றும் மெதுவான வளர்ச்சியே நிலவுகிறது. அந்த வகையில் ஊழல் இல்லாத அரசு மற்றும் வேகமான வளர்ச்சியை பிரதமர் மோடியால் மட்டுமே நடத்த முடியும். இவ்வாறு மக்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

அதன்படி  முதல் முறையாக பா.ஜனதா மேகாலயாவின் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் களமிரங்க உள்ளது. ஆகவே இந்த தேர்தலில் பா.ஜனதா சிறப்பாக செயல்படும் என்றும் பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு பகுதிகளுக்கு 50 முறைக்கு மேல் வெற்றி பெற்றுள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த முந்தைய அனைத்து பிரதமர்களின் வருகையை விட அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.