தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சோபனா. இவர் தற்போது நடிகரும் இயக்குனருமான ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் ஒரு மலையாள படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ் மற்றும் ஆசிப் அலி போன்றோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஒட்ட என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கடந்த 80’களின் இறுதியில் வெளியான வாத்தியார் வீட்டு பிள்ளை மற்றும் மல்லுவேட்டி மைனர் ஆகிய 2 படங்களில் சத்யராஜ் மற்றும் ஷோபனா இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் 32 வருடங்களுக்கு பிறகு ஷோபனா மற்றும் சத்யராஜ் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.