
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார், தனது மனைவி ராதிகா பற்றி பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. தனது முதல் மனைவியையும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளையும் ராதிகா எவ்வளவு அன்பாக நடத்தினார் என்பதைப் பற்றி சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

“ராதிகா எனது முதல் மனைவியையும், அவர்களுக்கு பிறந்தவர்களையும் ரொம்பவே அரவணைப்பாக பார்த்துக்கொள்வார். அவர்களிடம் ராதிகாவுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. எனது முதல் மனைவியிடம் அவ்வளவு அன்பாக பழகுவார். அந்த விஷயத்தில் ராதிகா எப்போதுமே கிரேட்தான். வரலட்சுமி நடிக்கக்கூடாது என்று நான் சொன்னபோதுகூட எனது முதல் மனைவியுடன் வந்து பேசி என்னை ஒத்துக்கொள்ளவும் வைத்தார்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.
சரத்குமாரின் இந்த கருத்து, ராதிகாவின் மனிதநேயத்தையும், அவரது அன்பான குணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.