ஹரியானாவில் ஹிஷார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தைச் சேர்ந்தவர் காஃபி (17). இவர் தனது 3 வயதிலேயே அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் ஆசிட் வீச்சுக்கு ஆளானார்.

அந்த விபத்தில் காஃபியின் முகம் மற்றும் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சிறுவயதிலேயே கண் பார்வை இழந்துள்ளார். இந்த நிலையில் இருந்த போதிலும் அவர் தனது கனவுகளை விடாமல் சண்டிகரில் உள்ள செக்டர் 26 இல் பார்வையற்றோர் பள்ளியில் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் காஃபி 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத் தேர்வுகளில் 95.6% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் தனது எதிர்கால கனவாக கூறியதாவது, டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கௌரவ பட்டம் பெற விரும்புவதோடு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என தெரிவித்துள்ளார். கண்பார்வையை இழந்த போதிலும் தன்னம்பிக்கையை இழக்காத பெண் என அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.