ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 16-வது ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 46 ரன்களும், சுப்மன் கில் 45 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்யாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இதன் மூலம்  சஞ்சு சாம்சன் 3000 ரன்களை பூர்த்தி செய்து தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். இவர் 3006 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரஹானே (2810 ரன்கள்) இரண்டாவது இடத்திலும், ஜாஸ் பட்லர் (2508 ரன்கள்) மூன்றாவது இடத்திலும், சேன்‌ வாட்சன் (2372 ரன்கள்) நான்காவது இடத்திலும், ராகுல் டிராவிட் (1276 ரன்கள்) ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.