
செல்போன்களுக்கு வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் மோசடி அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் அளிக்க ‘சஞ்சார் சாதி’ என்ற செயலியை தொலைத்தொடர்பு துறை அறிமுகம் செய்துள்ளது. இதனை நேற்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சந்தேகத்திற்குரிய அழைப்பு எதுவும் வந்தால், இந்த ஆப்பில் லாகின் செய்து நேரடியாக புகார் அளிக்கலாம். மொபைல் தொலைந்து விட்டால் உடனடியாக அதை பிளாக் செய்யலாம் உங்களுக்கு தெரியாமல் உங்களது பேரில் போன் நம்பர் வைத்திருந்தாலும் இந்த ஆப் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும். மேலும் இந்த போன் ஒரிஜினலா என்பதை பார்ப்பதற்கு IMEI என்ற எண்ணை கொடுத்து செக் பண்ணலாம்.