சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேச்சு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த மூன்று மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் துணைத் தலைவர் மனோகரன், ஜெயக்குமார், கிஷோர் குமார் உள்ளிட்ட மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தற். அந்த மனுவில்,

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது எதன் அடிப்படையில் பேசினார் ?  சனாதனத்தை ஒழிப்பது பற்றி பேசிவிட்டு,  அரசில் அமைச்சராக எப்படி நீடிக்கிறார் ? அமைச்சர் பேசியபோது அதே மாநாட்டில் கலந்து கொண்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, எப்படி இன்னும் அமைச்சராக பதவியில் இருக்கின்றார் என்றும்,

எம்பி ஆ. ராசா  ஒரு அமைச்சர், ஹிந்து மதத்திற்கு எதிராக பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அவரும் இதுகுறித்து பேசிவிட்டு MPஆக  பதவி வகிக்கின்றார். குறித்து அவர்கள்  தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தாங்க.

இந்த வழக்கு விசாரணையில் அமைச்சர்கள் தரப்பிலும்,  எம்பி தரப்பிலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது. உரிய ஆவணங்கள்,  ஆதாரங்களை தாக்கல் செய்யாமல் பொத்தாம் பொதுவாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று  கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் நீதிபதி இந்த மனு தாக்கல் தொடர்பாக  மனுதாரருக்கு அவகாசம் வழங்கி வழக்கு விசாரணை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். அப்போது அமைச்சர் உதயநிதி பேசியது குறித்தும்,  அதற்கு சேகர்பாபு மற்றும் ஆ. ராசா எதிர்ப்பு தெரிவிக்காதது அல்லது அவரவர்   கருத்துக்களை ஆவணங்களாகவோ அல்லது வீடியோக்களாகவும் தாக்கல் செய்வதற்கு மனுதாரர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.