தமிழக முதல்வரும்,  திமுக தலைவருமான முக.ஸ்டாலின் மகனும்,  தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும்,  திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், சனாதனத்தை டெங்கு – மலேரியா – கொரோனாவை போல் ஒலிக்க வேண்டும் என்று பேசி இருந்தாடீ.  இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக வட மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டது. அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்து அமைப்பை சேர்ந்த சாமியார் ஒருவர் அவர் தலைக்கு விலை வைத்தனர். ஆனாலும் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தில் பின்வாங்கவில்லை. அண்மையில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி,  சனாதனம் குறித்து பேசுவதற்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் சொன்னதாக எல்லாம்  செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் தான் முதல்வர் மு.க ஸ்டாலின் உதயநிதி பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆதரவு தெரிவித்து, நீண்ட விளக்கத்தை கொடுத்திருந்தார்.இதனிடையே உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். உதயநிதி ஸ்டாலின் மீது தமிழரை ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் X  பக்கத்தில்,  #கலைஞர்100 என பதிவிட்டு முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவரும், உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவுமான கலைஞர் கருணாநிதி பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கலைஞர் கருணாநிதி,

சும்மா படிக்க கூடாது என்று சொன்னால் ? நாம் கேட்போமா…  அதற்காக படித்தால் பாவம் என்றார்கள், வெறும்  பாவம் என்று சொன்னால் ? பயப்பட மாட்டோம் அல்லவா…  படித்தால் நரகத்துக்கு போவார்கள் என்றார்கள். அதையும் மிஞ்சி யாரும் படிக்க வந்தால் அவனைப் பிடித்து  நாக்கை இழுத்து வைத்து,  கொள்ளிக்கட்டையால்…  பழுக்க காய்ச்சிய  இரும்பால் சுட்டார்கள்.

 

இதை செய்தியாக மாத்திரம் சொல்லவில்லை..  இன்னைக்கு கூட மனுதர்ம சாஸ்திரத்தை எடுத்து பிரித்து படித்துப் பார்த்தால், அதில் என்ன எழுதி இருக்கிறது என்றால் ? சூத்திரன் ஒருவன் படித்தால்…  அவன் நாக்கை இழுத்து வைத்து பழுக்க காய்ச்சிய இரும்பால் சுட்டு பொசுக்க வேண்டும் என்று எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரம்,  இன்றைக்கும் கொளுத்தப்படாமல் தான் நூலகத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

அதை கொளுத்தாமல்  அங்கு உள்ள கருத்துக்களை கொளுத்தியவர் பெரியார். அங்குள்ள கருத்துக்களை காலில் போட்டு மிதித்தவர் பேரறிஞர் அண்ணா. அதிலே உள்ள கருத்துக்களை தூக்கி கடலில் எறிந்தவர்  டாக்டர் அம்பேத்கர். இதையெல்லாம் மறந்துவிட முடியாது என பேசினார். 6-2-1994இல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்த வீடியோவை இப்போது போட்டதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதில் உறுதியாக இருக்கின்றார். அதோடு மட்டுமல்ல நான் கலைஞர் பேரன் எனக்கு பயமில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார் என திமுகவினர்  கருத்து பதிவிட்டு வருகின்றனர்.