தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் சிட்டாடல் என்ற ஹிந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார். சிட்டாடல் வெப் தொடரை ராஜ் மற்றும் டி.கே இயக்கும் நிலையில், வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா ஸ்டண்ட் செய்யும் சில போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியானது.

இந்நிலையில் வெப் தொடரில் சமந்தாவின் கேரக்டர் என்ன என்பது குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிகை சமந்தா நடிக்கிறாராம். அவருக்கு அப்பாவாக வருண் தவான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது 80 மற்றும் 90’களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகளில் வருண் தவான் மற்றும் சமந்தா நடிப்பது போன்று அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. மேலும் பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிகை சமந்தா நடிப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.