இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் தனது சக வீரர்களிடம் உணர்ச்சிகரமாகப் பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டது.
டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியின் போது, தேநீர் இடைவேளைக்கு முன்னதாக இந்த வீடியோ எடுக்கப்பட்டு பகிரப்பட்டது. இது கிரிக்கெட் வீரர்களின் ஓய்வறை விதிமுறைகளை மீறுவதாக இருப்பதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இங்கிலாந்து வாரியத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
வீரர்களின் ஓய்வறைப் பகுதிகளில் படம்பிடிக்கும் கருவிகளை வைத்திருக்கக் கூடாது என்ற ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் ஒருவர், டெலிகிராப் ஸ்போர்ட்ஸ் பகிர்ந்த செய்தியின் கீழ் அவரைப் பணிநீக்கம் செய்யுங்கள் என்று இரண்டு வார்த்தைகளில் அதிரடியாகக் கூறியுள்ளார்.
One of England’s all-time greatest captains, Ben Stokes, has decided to retire from international cricket at the end of this Test match.
Ben, you have been the most inspirational captain, leader and legend this team could have ever hoped for.
We love you so much and wish you… pic.twitter.com/U5grq0F0kj
— England Cricket (@englandcricket) June 28, 2026
“>
ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு இங்கிலாந்து தரப்பில் என்ன விளக்கம் அளிக்கப்படும் என்பது தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 122 டெஸ்ட், 114 ஒருநாள் மற்றும் 43 டி20 போட்டிகளில் விளையாடி, இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை உள்ளிட்ட பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
