
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக தன் தலையை வெட்டிக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும் பாஜக எம்பியுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், வருண் காந்தியை நேரில் சந்தித்தால் அவரை கட்டி அணைத்துக் கொள்வேன். ஆனால் அவரது சித்தாந்தத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார். மேலும் தான் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு செல்ல மாட்டேன் என்றும் அதற்கு முன்பாக என் தலையை வெட்டிக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.