பீகார் மாநிலத்தில் ஹர்ஷ் ராஜ்புத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இவருடைய தந்தை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தன்னுடைய மகனின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்ததால் ஹர்ஷ் தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்து வந்ததோடு ஒருபுறம் சினிமா வாய்ப்புக்காகவும் அழைந்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தின் போது ஹர்ஷின் வேலை பறிபோன நிலையில், பொதுமுடக்கம் காரணமாக சினிமாவிலும் வாய்ப்பு தேடி அவரால் அழைய முடியவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த ஹர்ஷ் கொரோனா காலத்தில் பலரும் youtube சேனல் ஆரம்பித்தது போன்று அவரும் youtube சேனல் ஆரம்பித்துள்ளார். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் சினிமா காட்சிகளை ஸ்பூஃப் செய்தும் காமெடி தொடர்பான வீடியோ காட்சிகளை பதிவிட்டும் வந்துள்ளார். இதனால் யூடியூப் சேனலில் ஹர்ஷுக்கு சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர். இதேபோன்று இன்ஸ்டாகிராமிலும் ஹர்ஷ் ஆக்டிவாக இருந்த நிலையில் பாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த இரண்டின் மூலம் ஹர்ஷுக்கு ஒரு மாதத்திற்கு 5 லட்சம் முதல் 8 லட்ச ரூபாய் வரை வருமானம் வருகிறது. இந்நிலையில் வேலையை இழந்து youtube சேனல் தொடங்கிய ஹரிஷ் தற்போது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடி கார் வாங்கியுள்ளார். மேலும் இது தொடர்பான தகவலை ஹரிஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருவதோடு, சாதாரண இளைஞர் ஆடி கார் வாங்கியது பலரது மத்தியில் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Harsh Rajput (@harshrajputin)

 

 

 

View this post on Instagram

 

A post shared by Harsh Rajput (@harshrajputin)