குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தரவுகளை புதுப்பிக்க அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று, “குடும்ப அடிப்படையிலான ஆதார் அப்டேட் ஆப்ஷன்” வாயிலாக முகவரி ஆவணங்கள் இல்லாவிட்டாலும் உங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் முகவரியையும் புதுப்பிக்கலாம்.

தனி நபருக்கான ஆவணங்கள் கிடைக்காத குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் முகவரியை புதுப்பிக்க குடும்பத் தலைவர் அடிப்படையிலான ஆதார் புதுப்பிப்பு ஆப்ஷனை பயன்படுத்தி முகவரியை புதுப்பிக்கலாம். ஆதார் முகவரியை புதுப்பிப்பதற்கு குடும்பத் தலைவரின் ஆதார் மட்டுமே உங்களுக்கு தேவைப்படும். தந்தை, தாய், மகள், மகன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் உள்ள உறவுகளுடன் விண்ணப்பதாரர் மற்றும் HOF பெயர் குறிப்பிடப்பட்ட உறவு ஆவணத்தின் சான்று இருந்தால் முகவரியை புதுப்பிக்கலாம்.