தஞ்சையில் கோடக் வங்கி வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி வந்துள்ளது.  குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 9000 கோடி வரவு  வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையானது. தற்போது தஞ்சையில் கோடக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர் கணக்கில் ரூபாய் 756 கோடி இருப்பு உள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. தனியார் நிறுவன ஊழியர் கணேசனுக்கு வங்கிக் கணக்கில் 756 கோடி மீதம் இருப்பதாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என் பெயர் கணேசன். நேற்று நைட் என்னுடைய கிரெடிட் கார்டு பில் அமௌண்ட் செலுத்துவதற்க்காக கோடக் மகேந்திரா அக்கவுண்டில் இருந்து பணம் அனுப்பினேன்.

பிறகு என்னுடைய பிரண்ட்ஸ் அக்கவுண்டுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டி இருந்தது. அதை அனுப்பிவிட்டேன் அனுப்புனதற்கு பிறகு பார்த்தீர்கள் என்றால் ? எனக்கு அந்த அமௌன்ட் கிரடிட் என்று காட்டிவிட்டது. மறுபடியும் kotak mahindraவில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. என்னுடைய நியூ பேலன்ஸ் என்று சொல்லி ஒரு அமௌன்ட் காட்டுச்சி.

என்னடா இவ்வளவு அமௌன்ட் காட்டுது என்று பார்த்தால் ?  756 கோடி கிரிடிட் ஆன மாதிரி எனக்கு மெசேஜ் வந்தது. சரி ஓகே என சொல்லிட்டு மார்னிங் பேனிங்கில் போய் கேட்டுக்கலாம் என  கேட்கும்போது, அவங்க என்ன சொன்னாங்க அப்படின்னா….  இல்ல இது, என்ன மெசேஜ்ன்னு தெரியல ? என்னன்னு செக் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன் அப்படின்னு சொன்னாங்க.

மேனேஜர் கிட்ட போய் பேசினேன். மேனேஜரும் அதேதான் என்கிட்ட சொன்னாரு.  அந்த ஸ்க்ரீன் ஷாட் மற்றும்  என்னுடைய விவரம் அனுப்புங்கன்னு சொன்னாரு. அத வாங்கிட்டு என் காண்டாக்ட் நம்பர் வாங்கிட்டு என்னை அனுப்பி வைத்துவிட்டார்கள் என கூறினார்.