விஜயின் லியோ படம்7  நாட்களில் 461 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் 7 நாட்களில் மிக அதிக வசூல் செய்துள்ள திரைப்படம் என்ற பெரும்பின்மையை லியோ பெற்றிருக்கிறது என்றும், உலக அளவில் மிகவும் மாபெரும் சாதனை படைத்து வருவதாகவும் 7 ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.