மீண்டும் திருமணத்திற்கு ரெடியாகும் அமலாபால் தனது பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகை அமலாபால் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது காதலை பிறந்தநாளில் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமலாபால் முத்தம் கொடுத்து காதலை ஏற்றுக்கொண்டார்.

இதனை ஜகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனது ஜிப்சி குயின்” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.