தமிழக கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் 4000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி பேசியதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 22,162 பயனாளர்கள் இருக்கிறார்கள். இதில் 14,628 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மக்களுக்கு அதிக வேலை வழங்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் வருடத்திற்கு 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும் கூறினார்.