தமிழகத்தில் கடந்த 2015-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை பெருங்களத்தூரில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு ரூ‌.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வைத்திலிங்கம் இது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று சமீபத்தில் எஸ்பி வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.