அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஷ்வா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை ஜனநாயக போராளியாக மாநில அரசு கருதுவதாகவும், இதனால் சிறையில் இருப்பவர்களுக்கு மாதம் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அதன்படி எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதம் 15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கிறது. ஒருவேளை அந்த நபர் உயிரோடு இல்லாமல் இருந்தால் அவருடைய மனைவிக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் இருவரும் இல்லாமல் இருந்தால் திருமணம் ஆகாத மகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.