
டெல்லி உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா என்பவர் நீதிபதியாக உள்ளார். சமீபத்தில் இவரது வீட்டில் கடந்த வாரம் ஹோலி விடுமுறையின் போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தீயணைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதில் மொத்தம் ரூ.100 கோடி பணம் இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் கணக்கில் வராத பணம். இந்த சம்பவத்தின் போது யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா அகமதாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா இதுவரை பணியிடை மாற்றம் செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.