நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பழமொழிகளில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் சாங் என்ற பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

இந்நிலையில் RRR படத்தின் நாட்டு நாட்டு நாட்டு பாடல் தன் மகன் ஜெஹாங்கீரையும் கவர்ந்துள்ளதாக நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடல் வைத்தால்தான் என் மகன் சாப்பிடுகிறான். இந்தப் பாடலை தெலுங்கில் கேட்பதையே அவன் விரும்புகிறான். இந்திய திரைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களால் பார்க்கப்படுவதை பெருமையாக உணர்கிறேன் என்று ஒரு பேட்டியில் கரீனா கபூர் கூறியுள்ளார்.