
மும்பை இந்தியன்ஸ் இதுவரையிலும் கலந்துகொண்ட 10 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவுசெய்து தடுமாறி வருகிறது. தற்போது நடந்து வரும் சீசனில் 11 மேட்சில் ரோகித்சர்மா 1 அரைசதம் மட்டும் அடித்து மீதமுள்ள 10 போட்டிகளில் சொதப்பிவிட்டார். அதோடு IPL வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆகிய வீரர்(16) மற்றும் கேப்டன்(10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்து உள்ளார்.
இந்நிலையில் ரோகித்சர்மா, தொடர்ச்சியாக 5 மேட்ச்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்துள்ளார். IPL-ல் ரோகித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும். அவர் இதற்கு முன்பாக கடந்த 2017-ல் நடைபெற்ற IPLல் தொடர்ச்சியாக 4 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்திருந்தார்.
எனினும் தற்போது 5 போட்டிகளில் 2(8), 3(5), 0(3), 0(3), 7(8) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி தன் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டானாலும், சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் 200 ரன்கள் இலக்கை எளிதில் கடந்து மும்பை வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.