பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருக்கிறார். இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் எம் ன.எஸ் தோனி ஆஸ்கர் விருது வென்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்துள்ளார்.

தி எலிபெண்ட் விஸ்பெர்ஸ் என்ற குறும்படத்தில் முதுமலை காட்டில் உள்ள குட்டி யானைகளை தங்கள் பிள்ளைகள் போல் வளர்ந்து வரும் பொம்மை-பெள்ளி தம்பதியினர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்த நிலையில் தற்போது எம்.எஸ். தோனி அவர்களை சந்தித்து அவர்கள் பெயர் பொறித்த சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை வழங்கியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.