
தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ரோஜா. இதில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா. மூன்று வருடங்களுக்கு மேல் ஓடிய இந்த சீரியல் டிஆர்பி-ல் நம்பர்-1 இடத்தை பெற்று இருந்த நிலையில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக நிறைவு பெற்றது.
இந்த நிலையில் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா தற்போது புதிய தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். அந்த சீரியலுக்கு சீதாராமன் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கின்றது. இந்த நிலையில் அந்த சீரியலின் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
