பெண்களுக்கு அதிக தங்க நகைகளை அணிய வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக ஒரு முறையாவது ஏற்பட்டிருக்கும். அதுபோல தற்போது பல ஆண்களும் தங்கம் அணிய ஆசைப்படுகின்றனர். ஆனால் சில நபர்களுக்கு தங்கம் ஒத்துக் கொள்ளாது. அவர் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தங்கம் அணிவதால் சிலருக்கு கழுத்தின் நிறம் கருப்பாக உருமாறும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த பிரச்சனையை சரி செய்து விட்டால் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் அதிக நாட்கள் இதனை கண்டு கொள்ளாமல் இருந்தால் கழுத்து முழுவதும் கருப்பாக மாறிவிடும். வயிற்று சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தங்கத்தின் உலோக சக்தி இந்த பிரச்சனையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. அது போல உடல் பருமனாக இருப்பவர்கள் தொடர்ந்து தங்கம் அணிவதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் என சொல்லப்படுகின்றது.