கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர்  ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்  என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 35 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 70க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுசேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக, பாமக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அதே போல், X தளத்தில், #Resign_Stalin என்ற ஹேஷ்டேக்-ஐ டிரெண்ட் செய்து வருகின்றனர்.