மதுரை ரயில் நிலைய நடைமேடைகள் உடன் இரட்டை ரயில் பாதையை இணைக்கும் பணிகள் காரணமாக தென்காசி to விருதுநகர் இடையில் போகும் சிறப்பு ரயில் தவிர்த்து அனைத்து ரயில்களின் இயக்கங்களும் வருகிற 9 ஆம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான மாற்று வழித் தடம், பகுதியாக ரத்து, முழுமையாக ரத்து போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

வண்டி எண்- 06663

காலை 11:30-க்கு புறப்படும் மதுரை to செங்கோட்டை விரைவு ரயில் 06/02/2023 முதல் 16/02/2023 வரை மதுரை-விருதுநகர் இடையில் இயங்காது. இந்த ரயில் வழக்கமான நேரத்தில் விருதுநகரில் இருந்து புறப்படும். அதோடு இந்த ரயிலாந்து 17/02/2023 முதல் 07/03/2023 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண்- 06664

மதியம் 11:50-க்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை விரைவு ரயில் 05/02/2023 முதல் 15/02/2023 வரை விருதுநகர்-மதுரை இடையில் இயங்காது. இதற்கிடையில் இந்த ரயில் வழக்கமான நேரத்தில் விருதுநகர் வரை இயக்கப்படும். அதோடு இந்த ரயில் 16/02/2023 முதல் 06/03/2023 வரை முழுமையாக ரத்துசெய்யப்படுகிறது.

வண்டி எண்-06503

மாலை 03:45-க்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை விரைவு ரயில் 16/02/2023 முதல் 05/03/2023 வரை விருதுநகர்-மதுரை இடையில் இயங்காது. இந்த வண்டியானது வழக்கமான நேரத்தில் விருதுநகர் வரை இயக்கப்படும்.

வண்டி எண்-06504

காலை 07:10-க்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை விரைவு ரயில் 17/02/2023 முதல் 06/03/2023 வரை மதுரை-விருதுநகர் இடையில் இயங்காது. இந்த வண்டி வழக்கமான நேரத்தில் விருதுநகரில் இருந்து புறப்படும்.

வண்டி எண்- 16847

மதியம் 11:30-க்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு வண்டி 01/03/2023 முதல் 03/03/2023 வரை திருச்சி-செங்கோட்டை இடையில் இயங்காது. ஆகவே ரயில் பயணிகள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே கேட்டுக்கொண்டு உள்ளது.