ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு அமைப்பில் புது அம்சத்தினை சேர்க்க இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இணையதளத்தில் உங்களது தகவல்களை நிரப்ப வேண்டி இருந்தது. அதற்கென நீங்கள் தட்டச்சு செய்யும் உதவியை பயன்படுத்துவீர்கள். எனினும் இந்த புதிய அம்சத்தின் உதவியுடன் நீங்கள் குரல் வழியே, அதாவது பேசியே டிக்கெட்டுகளையும் பதிவுசெய்யலாம்.

இந்த புது அம்சத்தின் வாயிலாக தகவல்களை நிரப்புவதில் உள்ள சிக்கலிலிருந்து விடுபடுவீர்கள். IRCTC-ன் இந்த மேம்பட்ட அம்சத்தின் உதவியுடன் பயணிகள் தற்போது குரல் வழியாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யமுடியும். இதன் வாயிலாக டிக்கெட் ஈஸியாக பதிவுசெய்யப்படும். இந்திய ரயில்வேயானது ஆஸ்க் திஷாவில் (IRCTC Ask Disha 2.0) பல்வேறு முக்கிய மாற்றங்களை செய்ய தயாராகி வருகிறது.

புது அம்சத்தின் மூலம் மக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து நேரத்தை மிச்சப்படுத்தலாம். இப்போது அதன் சோதனை பதிப்பானது தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றியடைந்தவுடன் பயணிகள் அனைவருக்கும்  திறக்கப்படும். IRCTC-ன் ஆஸ்க் திஷா 2.0 வாயிலாக குரல் கட்டளையின் விருப்பம் அனைத்து பயணிகளுக்கும் விரைவில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் டிக்கெட்டின் பிரிவியூ,பிரிண்ட்,ஷேர் விருப்பமானது கிடைக்கும். இதில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகுப்பு பயணிகளும் தற்போதைய குரல் கட்டளை வாயிலாக வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆகவே அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு கூடிய விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.