2023-24 ஆம் வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மாதாந்திர வருமானம் பெறுவதற்கு மூத்தக்குடிமக்கள் தம்பதியினர் வங்கி (அ) போஸ்ட் ஆபிஸில் ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒரு நபர் நம்பகமான அரசாங்க ஆதரவு திட்டத்தில் ரூ.60 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் முழுத்தொகையையும் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் பெற்றோரின் பெயரில் போட்டு தங்களைத் தாங்களே திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் நிலையான வருமானம் உங்களது வயதான பெற்றோரின் அன்றாடச் செலவுகளுக்கு பயன்படுத்தப்படலாம். அதோடு நீங்கள் விரும்பினால் அதில் சிலவற்றை உங்களது சொந்த தேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு காலாண்டிலும் செலுத்தப்படும் வட்டி, கணக்கு வைத்திருப்போர் அதைக் கோரவில்லை எனில் கூடுதல் வட்டி பெறாது. திட்டம் முதிர்ச்சியடையும்போது நீங்கள் ரூ.60 லட்சத்தை முழுமையாக திரும்பப் பெறுவீர்கள். 2023-24 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான (SCSS) வட்டி விகிதம் வருடத்திற்கு 8.2 சதவீதம் ஆகும்(ஏப்ரல்-ஜூன்). டெபாசிட் செய்யப்பட்ட பணம் காலாண்டு வட்டி செலுத்துதலுக்கு உட்பட்டதாகும்.

மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2023-ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

# மூத்தக்குடிமக்கள் தம்பதியினர்-ரூ 60 லட்சம் (மொத்த முதலீடு)

# காலாண்டுக்கான வட்டி -ரூ 1,23,000

# திட்ட காலம் – 5 வருடங்கள்

# வட்டி விகிதம் – 8.2 சதவீதம்

# முதிர்வுத் தொகை – ரூ 60 லட்சம்

# மொத்த வட்டி – ரூ 24,60,000