
ரயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது பெட்டிகளில் 5 இலக்க எண்கள் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த எண்களில் ரயிலின் முழு வரலாறும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்து தற்போது நாம் தெரிந்துக்கொள்வோம். அந்த எண்ணில் முதல் 2 இலக்கங்களானது ரயில் பெட்டி தயாரிக்கப்பட்ட வருடத்தை குறிக்கும். அடுத்த இலக்கங்கள் அப்பெட்டி குறிப்பிட்ட வருடத்தில் செய்யப்பட்ட எத்தனையாவது பெட்டி என்பதை குறிப்பதாகும்.
எடுத்துக்காட்டாக ரயில் பெட்டியில் 98397 என்பதில் 98 என்பது இப்பெட்டி 1998-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும். அதேபோன்று கடைசி எண் 397 வாயிலாக அந்த பெட்டி ஸ்லீப்பர் வகுப்பு என்பது தெரியவரும். மற்றொருபுறம் 05497 இன் 497 இலக்கங்கள் ஜனரல் பெட்டியை குறிக்கும். இதில் ஏசி முதல்வகுப்பு 001-025 வரையிலான வரிசை எண்களை கொண்டுள்ளது. அதோடு பெட்டியில் 05497 எண் என்று எழுதப்பட்டால் அது 2005-ம் வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பது அர்த்தமாகும்.
# 001-025-AC First class
# 026-050-Composite 1AC + AC-2T
# 051-100-AC-2T
# 101-150- AC-3T
# 151-200-CC (AC Chair Car)
# 201-400-SL (2nd Class Sleeper)
# 401-600-GS (General 2nd Class)
# 601-700-2S (2nd Class Sitting/Jan Shatabdi Chair Class)
# 701-800-Sitting Cum luggage Rake
# 801 +-Pantry Car, Generator or Mail