ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது அதுகுறித்த விதிகளை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்படி, மது குடித்துவிட்டு ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாது. அது கண்டறியப்பட்டால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் தகுந்த நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட சட்டத்தின் படி, ரயிலில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்து சென்றவர் பிடிபட்டால் அவருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

இது தவிர்த்து தடைசெய்யப்பட்ட பொருட்களால் ஏதேனும் சேதம் (அ) விபத்து ஏற்பட்டால் அதற்குரிய செலவையும் குற்றவாளி ஏற்றுக்கொள்வார். ரயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்யும்போது சோதனையில் எப்படியாவது தப்பித்து விடலாம் என நினைத்தால், அது இன்னும் சிக்கலில் முடியும். திறந்த மது பாட்டிலுடன் ஒரு நபர் பிடிபட்டால் அமைதியை சீர்குலைத்ததற்காக RPF அந்நபருக்கு அபராதம் விதிக்கலாம். அதோடு ரயில் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு சென்றால் அவை மதுபானம் குறித்த வரிஏய்ப்பு வழக்காகவும் இருக்கலாம்.