ட்விட்டரில் குட்டி எலியின்  வீடியோ ஒன்று 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. 

இந்த டிஜிட்டல் உலகில் தற்போது மிகச்சிறந்த என்டர்டெயின்மெண்ட் ஆக இருப்பது சமூக வலைதளங்கள் தான். மக்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை அதில் கண்டு மகிழ்கிறார்கள். சமூக வலைதளங்களில் மனிதனுக்கு இருக்கக்கூடிய பிற கவலைகளிலிருந்து அவனை விடுவித்து சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும் வகையில் பல வீடியோ காட்சிகள் தொடர்ந்து வளம் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி ஒரு அற்புதமான வீடியோ காட்சி ஒன்று ட்விட்டரில் 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. அதில், குட்டி எலி ஒன்று மனிதர்களைப் போல மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்டால் ? அது மழையில் சாதாரணமாக நனைந்தபடி இல்லாமல், முகத்தை தலையை நன்கு தேய்த்து குளித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களைப் போலவே அப்படியே எலி குளியல் செய்யும் காட்சி 13 மில்லியன் மக்கள் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.