சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட போர் நூறாவது நாளை எட்டிய நிலையில் அங்கு பயணிகள் விமானம் ஒன்று திடீர் விபத்தில் சிக்கியுள்ளது. அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ஆண்டனோவ் பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கி உள்ளது.

இதில் ராணுவ அதிகாரிகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதனிடையே நூறாவது நாளான நேற்று போரில் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கிடையே நடக்கும் இந்த போரினால் குடிமக்கள் பலர் எல்லையைத் தாண்டி வேறு இடங்களுக்கு தப்பி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.