ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இது குறித்து மாநில செய்தி தொடர்பாளர் சபியுல்லா ரஹிமி கூறுகையில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நாடு முழுவதிலும் பெய்து வரும் கனமழை காரணமாக 31 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

ஜல்ரெஸில்  மாவட்டத்திற்கு அவசர உதவி குழு விரைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 604 வீடுகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 214 பேர் இயற்கை பேரழிவு காரணமாக உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.