மும்பை, உள்ள ஓட்டலில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட 41 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபர் குஐராத்தில் உள்ள ஒரு வைரத் தொழிற்சாலையின் மேலாளர் ஆவார். குஜராத்தில் உள்ள ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்திற்கு இந்த மேலாளர் நிதி உதவி வழங்கி வந்துள்ளார். அந்த குடும்பத்தில் உள்ள ஒரு சிறுமி தன்னுடன் மும்பைக்கு வர வேண்டும் இல்லையென்றால் நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விடுவேன் என அந்த குடும்பத்தை மிரட்டி உள்ளார். தனது குடும்ப சூழ்நிலையால் அந்த சிறுமியின் தாயார் மேனேஜருடன் வெளியே செல்ல அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து சனிக்கிழமை அந்த நபர் சிறுமியை மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் அந்த சிறுமி தன் மகள் என பொய் சொல்லி போலி ஆதார் கார்டையும் பயன்படுத்தி ரூம் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து சிறுமியை பாலியல் துன்புறுத்தல் நிகழும் போது மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி ஹோட்டல் ஊழியர்களிடம் உதவி கோரியதையடுத்து, மேலாளரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையின் போது அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி, தனது குடும்பத்தின் அழுத்தத்தினால் தொழிற்சாலையில் வேலை செய்து இவர் கூப்பிடும் இடத்திற்கு செல்வேன், இதை மறுத்தால் நிதியுதவி வழங்குவதை நிறுத்தி விடுவேன் என கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.