
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து அண்மையில் வெளியான தளபதியின் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனக்கு பெரிதும் ஸ்கோப் இல்லை என தெரிந்த பிறகும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் நடித்தேன் என ராஷ்மிகா கூறினார். எனினும் வாரிசு திரைப்படத்தில் பாடல்களில் ராஷ்மிகாவுக்கு அதிக ஸ்கோப் இருந்தது. அதனை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார்.
ரஞ்சிதமே, ஜிமிக்கு பொண்ணு உட்பட 3 பாடல்களிலும் நடனத்தை தெறிக்கவிட்டார் ராஷ்மிகா. அண்மையில் ராஷ்மிகா ஒரு விருது வழக்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இவ்விழாவில் ராஷ்மிகா ரஞ்சிதமே மற்றும் புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#RashmikaMandanna sizzling dance performance @iamRashmika pic.twitter.com/iLMHhauHhV
— Star Frames (@starframesoffl) March 5, 2023