சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழையானது நேற்று இரவில் இருந்து வெளுத்து வாங்கி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் காலை 8:30 மணி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையமானது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தாலும்,  மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால நடவடிக்கையாக இரவு பகல் பாராமல் கண் தூங்காமல் உடனடியாக பணி செய்து வரக்கூடிய காட்சிகள் தான் பார்க்க முடிகிறது.

ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்த பொழுதும் தீயணைப்பு வீரர்கள், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அப்புறப்படுத்த கூடிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தொடரும் மழை காரணமாக தண்ணீர் தேங்கி இருப்பதை பார்க்க முடிகிறது.

மாநகராட்சி நிர்வாகமானது முழுமையான பணிகளை முடிக்க விடப்பட்டுள்ளது.  வளசரவாக்கம்,  சோளிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழையினுடைய தாக்கம் அதிகமாக இருப்பதால் சென்னை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி  வேண்டுகோளாக விடுத்துள்ளது.