
கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே வந்த ரயில் வேகமாக வேன் மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 2 மாணவர்களை அழைத்து செல்லும்போது வழியில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள ஒருவர் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. இந்நிலையில் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க காரணமாக இருந்த ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கூறியதாவது, தமிழ் மொழி தெரியாத வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவது தான் இது போன்ற விபத்துகளுக்கு காரணம்.
அதுமட்டுமின்றி அந்த வட மாநிலத்தவர் மது அருந்திவிட்டு தூங்கி உள்ளார். மேலும் மொழி பிரச்சனையும் அவருக்கு இருந்துள்ளது. முதலில் இது போன்ற கிராம பகுதிகளில் உள்ள ரயில் கேட் பகுதிகளில் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிய அமர்த்துங்கள் ரயில்வே துறையின் கவனக்குறை தான் இது போன்ற இழப்புகளுக்கு மிக முக்கிய காரணம் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.