காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதாவது இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்றும், அரசியல் தலைவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். அதன் பிறகு சுய அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஆர்எஸ்எஸ் வசம் இருக்கிறது என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் தொடர் அமளியால் இன்று 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில் தற்போது இந்திய ஜனநாயகம் குறித்து தவறான முறையில் பேசியதால் ராகுல் காந்தியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக உறுப்பினர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில் ராகுல் காந்தி தான் இந்திய ஜனநாயகம் குறித்து தவறான முறையில் பேசவில்லை எனவும், எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் மக்களவையில் இதற்கு விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.