கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு  தாக்கல் செய்துள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கூறிய வழக்கில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கேரள அரசு முல்லை பெரியாறு அணையை கட்டுமானம், புவியியல் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் சர்வதேச நிபுணர் குழுவுடன் இரு மாநில பிரதிநிதிகளும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஆய்வில் பங்கேற்க வேண்டும் எனவும் கேரளா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.