
பீகார் மாநிலம் கயாவில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியின் போது ஷெல் குண்டு ஒன்று குலர்வெத் கிராமத்தில் பாய்ந்து வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தினால் ஹோலி பண்டிகை கொண்டாட இருந்த அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.