அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டல் ஒன் என்று அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ற பலர் கலந்து கொண்டனர். இவர் பதவியேற்ற பிறகு அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. 42 முக்கிய ஆவணங்களிலும், பல நிர்வாக ரீதியான உத்தரவுகள் என்று 100-க்கும் மேற்பட்டவற்றில் அவர் கையெழுத்து விட்டார். இதில் அமெரிக்காவில் ஆண், பெண் இரு பாலருக்கும் மட்டுமே அனுமதி, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது போன்ற முக்கிய முடிவுகளும் அடங்கும்.

இதையடுத்து உக்ரின் போர் குறித்தும் அவர் கடுமையாக சாடியிருந்தார். கடந்த 2022 ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அதிபர் புதின் இணங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ரஷ்யாவில் பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, புதின் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் அவர் ரஷ்யாவை அழிக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.

பணவீக்கம் உள்ளிட்டவற்றால் ரஷ்யா பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதோடு புதினை நேரில் சந்திக்க விருப்பம் உள்ளதாகவும் அவர் கூறினார். தனது முந்தைய ஆட்சி காலத்தை நினைவு கூர்ந்த அவர் புதினுடன் உச்சி மாநாட்டில் பங்கேற்றது பற்றி கூறினார். நான் அவருடன் நன்றாக பழகினேன், அவர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். போரை முடிவுக்கு கொண்டுவர அனுமதி ஒப்பந்தம் தேவை என்று உக்கிரன் அதிபர் ஜெலென்ஸ்கி தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.