தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இவர் நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு பேட்டியில் நான் காட்டுப் பசியில் இருக்கிறேன். முன்பு இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் மன்மதன் என்ற படத்தை நானே இயக்கி நடித்தேன் என்று பேசிய வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். அதோடு எஸ்டிஆர் 48 என்ற அப்டேட்டையும் கொடுத்துள்ளார். மேலும் இதன்மூலம் வல்லவன் மற்றும் மன்மதன் படங்களை சிம்பு அவரே இயக்கி நடித்தது போன்று தற்போது தன்னுடைய 48-வது திரைப்படத்தையும் அவரே இயக்கி நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Patience is a virtue. It took a lot of faith but it’s worth the wait 🙏🏻#STR48 pic.twitter.com/VqG0NTEtkk
— Silambarasan TR (@SilambarasanTR_) March 7, 2023